ஷாருக்கான் தனது மகளுடன் கவர்ச்சி படத்தை பார்க்க வேண்டும் : பா.ஜ.க எம்பி விமர்சனம்

Shah Rukh Khan
By Irumporai Dec 18, 2022 05:08 AM GMT
Report

ஷாருக்கான் , பதான் படத்தை அவரது மகளுடன் பார்க்க வேண்டும் என ம.பி மத்தியப் பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் விமர்சித்துள்ளார்.

பதான் பட பாடல்

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படத்தில் இருந்து அண்மையில் பேஷாரம் ரங் எனும் கவர்ச்சி பாடல் வெளியானது. அதில் நாயகி தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியாக நடனமாடி இருந்தார்.

ஷாருக்கான் தனது மகளுடன் கவர்ச்சி படத்தை பார்க்க வேண்டும் : பா.ஜ.க எம்பி விமர்சனம் | Mp Assembly Speaker Said Shah Rukh Khan

இந்த பாடலுக்கு பாஜகவினர் பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இந்த பாடல் குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

மகளுடன் பார்க்க வேண்டும்

அதே போல, மத்தியப் பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் கூறுகையில், ஷாருக்கான் தனது மகள் சுஹானா கானுடன் அந்த பாடலை பார்ப்பாரா.? பதான் திரைப்படத்தை அவரது மகளுடன் பார்க்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். என அவர் கூறியுள்ளார்.