கலவர பூமியான இலங்கை - மேயர் வீட்டில் தீ வைப்பு : ஆளும்கட்சி எம்.பி உயிரிழந்ததால் உச்சக்கட்ட பரபரப்பு!

Sri Lanka Amarakeerthi Athukorala
By Swetha Subash May 09, 2022 01:33 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இலங்கை
Report

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளாகிய பொதுமக்கள் அரசிற்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கலவர பூமியான இலங்கை - மேயர் வீட்டில் தீ வைப்பு : ஆளும்கட்சி எம்.பி உயிரிழந்ததால் உச்சக்கட்ட பரபரப்பு! | Mp Amarakeerthi Found Dead In Srilankan Conflict

கடும் பொருளாதார நெருக்கடிக்கு நீங்கள் தான் காரணம் எனவே அதிபர் கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு மாதமாக நீடித்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த அவசர நிலை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருளாதார நெறுக்கடியால் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார். பிரதமர் பதவி விலகிய நிலையிலும், அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, பல இடங்களில் வன்முறை வெடித்து, கலவரமாக உருவெடுத்துள்ளது.

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்தடுத்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

கலவர பூமியான இலங்கை - மேயர் வீட்டில் தீ வைப்பு : ஆளும்கட்சி எம்.பி உயிரிழந்ததால் உச்சக்கட்ட பரபரப்பு! | Mp Amarakeerthi Found Dead In Srilankan Conflict

இந்நிலையில், இலங்கையின் கொழும்புவில் நடைபெற்ற கலவரத்தில் ஆளுங்கட்சி எம்பி அமரகீர்த்தி அத்துகோரலா சடலமாக மீட்கப்பட்டதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களை நோக்கி எம்பி அமரகீர்த்தி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்த்தாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மக்கள் அவரின் காரை வழி மறைத்துகொண்டு தாக்க முற்பட்டதால் அருகில் இருந்த கட்டிடத்தில் எம்பி அமரகீர்த்தி நுழைந்ததாகவும் அங்கு தனது கைத்துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், இலங்கையில் மொரட்டுவை மேயர் வீட்டில் தாக்குதல் நடத்தி, போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். அரசின் ஆதரவாளர்களை ஏற்றி வந்த பேருந்துக்கு மாலிகாவத் பகுதியில் தீ வைக்கப்பட்டுள்ளது.