18 நாடுகளால் தடை செய்யப்பட்ட திரைப்படம் எது தெரியுமா? காரணம் இதுதானாம்!
18 நாடுகளால் தடை செய்யப்பட்ட படம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
18 நாடுகளால் தடை
சினிமாவில் சில படங்கள் வெளியாவதற்கு முன்பும், வெளியான பின்பும் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அப்படி ஒரு படத்தை 18 நாடுகள் தடை செய்துள்ளன. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இயக்குநர் லார்ஸ் வான் ட்ரையர் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான தான் 'Antichrist'.
ஹாலிவுட் படமான இந்த படத்தில் வில்லியம் டேஃபோய், சார்லட் தம்பதிகள் தங்கள் மகனின் மரணத்திலிருந்து மீள்வதற்காகக் காட்டு பகுதிக்குச் சுற்றுலா செல்கின்றனர்.அப்படி சுற்றுலா செல்லும் போது அவருடைய மனைவி அரிய நோயால் பாதிக்கப்படுகிறார். இதனால் தன்னையும் அழித்துக்கொண்டு, கணவருக்கும் தொல்லை கொடுக்கிறார்.
திரைப்படம்
இதன் காரணமாகக் காட்டில் நடக்கும் சம்பவங்கள் விருவிருப்பாக மற்றும் த்ரில் காட்சிகள் தான் முழு படம். ஆனால் இந்த படத்தை இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளில் தடை செய்யப்பட்டது. இதற்குக் காரணம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மன நலனின் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் மனதளவில் பாதிப்பை உண்டாக்கலாம் என்பதால் படத்தைத் திரையிட பல்வேறு நாடுகள் தடைசெய்ததாகக் கூறப்படுகிறது.இந்த படம் வெளியான நாடுகளில் பாக்ஸ் ஆஃபீஸில் 11 மில்லியன் அமெரிக்க டாலர் குவித்தது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.95.61 கோடி எனக் கூறப்படுகிறது.