புதிய அவதாரம் எடுக்கும் அண்ணாமலை ,சினிமாவில் அறிமுகம் : படத்தின் பெயர் என்ன தெரியுமா ?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கன்னட திரைப்படமான அரபி என்ற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்து முடித்துள்ளார்.
2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கன்னடத்தில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.
அரபி என்ற பெயரில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் விஸ்வாசேவுக்கு பயிற்சியாளராக நடிக்க தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை இயக்குநர் அனுகியுள்ளார். திரைப்படத்தின் கதையை கேட்டவுடன் அண்ணாமலைக்கு அது பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்த அண்ணாமலை ரூ.1 மட்டுமே ஊதியமாக பெற்றுக்கொண்டு நடித்து இருக்கிறார். அரபி திரைப்படத்தில் அண்ணாமலை வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை நடித்துள்ள படத்தின் வெளியீட்டுக்காக பாஜகவினர் ஆரவமுடன் காத்துள்ளனர். ஐபிஎஸ் அண்ணாமலை இருந்தவர் பிறகு விவசாயி அண்ணாமலையாக மாறினார், பின்னர் எல்முருகன் மத்திய அமைச்சர் ஆன பிறகு தமிழக பாஜக தலைவரக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சினிமாவில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து சினி உலகில் என்ட்ரி கொடுத்துள்ளார் அண்ணாமலை .

Brain Teaser Maths: '10+5=இற்கு விடை 35' எனில் வினாக்குறி இருக்குமிடத்தில் என்ன விடை வரும்? Manithan

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
