Maaza ஜூஸ் டப்பாவில் செத்து மிதந்த எலி - ஷாக்கான குழந்தைகள்!
ஒருவர் தனது குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுத்த ஜூஸில் எலி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செத்த எலி
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே உள்ள பி.கே.புரம் பகுதியியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் காட்பாடி - குடியாத்தம் சாலையில் இருந்து பெட்டிக்கடை ஒன்றில் தனது குழந்தைகளுக்காக மாஸா ஜூஸ் வாங்கி கொடுத்தார்.
அது அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்டு 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, அதனை அங்கி கொடுத்துள்ளார். பின்னர், அதனை குடித்த குழந்தைகள் கசப்பாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
தந்தை புகார்
இந்நிலையில், சந்தேகமடைந்த தந்தை அந்த ஜூஸ் டப்பாக்களை பிய்த்து பார்த்துள்ளார். அதில் குட்டியாக எலி ஒன்று செத்து மிதந்துள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த அந்த குழந்தைகளின் தந்தை அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து, அதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், இது போன்று குழந்தைகளுக்கு குளிர்பானங்கள் வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.