ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் மறைவுக்கு இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் சேக் கலீஃப்பா மறைவை அடுத்து இந்தியாவில் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும்,அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் நஹ்யான் இன்று காலமானார்.அவருக்கு வயது 73. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக இருந்து வந்தார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த அதிபர் ஷேக் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு இந்திய பிரதமர் உள்பட பல்வேறு நாட்டு முக்கியத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரின் மறைவையொட்டி இந்தியாவில் நாளை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும்,அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும் மத்திய அரசு அறிவிப்பு.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கோட்டாபய அரசை வீழ்த்தி படு குழியில் தள்ளிய நபர்! பல்வேறு உள்ளக தகவல்கள் அம்பலம் - அரசியல் தளத்தில் பரபரப்பு IBC Tamil

விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டிற்கு முன்பாக விழுந்து வணங்கி ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரணி (படங்கள்) IBC Tamil
