கைக்குழந்தையுடன் காத்திருந்த தாய்...நெகிழ வைத்த நடிகர் அஜித்..!
திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித்தை காண கை குழந்தையுடன் வந்த தாயை அஜித் அருகில் நின்று புகைப்படம் எடுத்து ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார்.
திருச்சியில் நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவருக்க ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
அண்மையில் வெளிநாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அஜித் பொருட்கள் வாங்கி சென்ற சிசிடிவி காட்சி வெளியானது அது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திருச்சியில் நடந்த துப்பாகிச் சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்தார். தகவல் அறிந்து ஒன்று கூடிய ரசிகர்கள் நடிகர் அஜித்தை காண திரண்டு இருந்தனர்.
கை குழந்தையுடன் வந்த பெண்ணை நெகிழ வைத்த அஜித்
அப்போது நடிகர் அஜித் மாடியின் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கையை அசைத்தார். அப்போது பள்ளி மாணவர்கள் சீருடையிலும், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.
நடிகர் அஜித்தை பார்த்த போது ரசிகர்கள் கையை உயர்த்தி சந்தோஷத்தில் ஆட்டம் போட்டனர். பின்பு நடிகர் அஜித்துடன் போலீசார் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அப்போது கை குழந்தையுடன் வந்த பெண் ஒருவருடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Another video ? #AjithKumar #AK61#அஜித்தே? pic.twitter.com/nqXRypCAFg
— AK? (@AjithKumar_AK__) July 27, 2022