தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!

Government of Tamil Nadu K. Annamalai
By Jiyath Jul 22, 2023 07:13 AM GMT
Report

தாயமொழிக் கல்வி குறித்து அறிக்கையை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலை

தாய்மொழிக் கல்வியை மத்திய அரசு ஊக்குவித்ததுபோல், தமிழக அரசும் முன்வரவேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அறிக்கை

அதில் "நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020, குழந்தைகள் அவர்களின் தாய்மொழியில் கல்வி கற்பதையும் பள்ளிகளில் மாநில மொழிகளை மேம்படுத்துவதையும் வலியுறுத்துகிறது.CBSE யின் சமீபத்திய சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள CBSE பள்ளிகள், உயர்நிலை வரை இந்திய மாநில மொழிகளைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்! | Mother Tongue Education Annamalai To Govt Ibc 09

வெளிநாட்டு மொழிகளுக்குப் பதிலாக நமது தாய்மொழிக் கல்வியை ஊக்குவித்து, குழந்தைகளுக்கான கல்வியை முழுமையாக்கியதற்காக, மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு, தமிழக பாஜக சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தாய்மொழிக் கல்வி, உண்மையான படைப்பாற்றலை உருவாக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதேபோன்ற உத்தரவை, தமிழகப் பள்ளிகளுக்கும் வழங்குமாறு இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக அரசை வலியுறுத்திக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.