மனவளர்ச்சி குன்றிய குழந்தை... 4வது மாடியில் இருந்து வீசிய கொடூர தாய்! - திடுக்கிடும் காட்சிகள்

Attempted Murder India Child Abuse Crime
1 வாரம் முன்

5 வயது குழந்தை மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்ததால், 4வது மாடியில் இருந்து வீசி கொலை செய்திருக்கிறார் அந்த தாய்.

பல் மருத்துவர்

பெங்களூரில் சிலிகான் நகரில் சம்பங்க ராம் நகர் பகுதியில் உள்ள அத்விக் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் பல் மருத்துவர் சுஷ்மா. அவரது கணவர் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தை... 4வது மாடியில் இருந்து வீசிய கொடூர தாய்! - திடுக்கிடும் காட்சிகள் | Mother Threw5 Year Old Daughter From The Balcony

இவர்களுக்கு பிறந்த குழந்தை மன வளர்ச்சி குன்றி பிறந்து இருக்கிறது. இதனால் குழந்தை பிறந்ததில் இருந்து மன வருத்தத்தில் இருந்திருக்கிறார் சுஷ்மா. தற்போது அந்த சிறுமிக்கு ஐந்து வயது ஆகிறது.

5 வயது குழந்தை

இந்நிலையில் அந்த சிறுமியை கடந்த சில மதங்களுக்கு முன்பாக ரயில் நிலையத்தில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். பின்னர் கணவர் தேடிப் பிடித்து அந்த குழந்தையை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அந்த குழந்தையை வளர்க்க மனம் இல்லாத தாய் நான்காவது மாடியில் இருந்து அந்த குழந்தையை பிடித்து தள்ளுகிறார். அந்த குழந்தை பயத்தில் தாயின் கழுத்தை இறுக பிடித்துக்கொண்டிருக்க, ஆனால் கையை வலுக்கட்டாயமாக பிடித்து உதறிவிட்டு கீழே தள்ளுகிறார் சுஷ்மா.

இதில் கீழே விழுந்ததுமே பரிதாபமாக அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஷ்மாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.