அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் : பிரதமர் மீது கடுப்பான மம்தா பானர்ஜி
அன்னை தெரசா மிஷினரி சேவை நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.
கிறிஸ்துமஸ் அன்று, மத்திய அரசு இந்தியாவில் உள்ள அன்னை தெரசா சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியதாகவும், இதனால் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகள் இன்றி தவித்து வருவதாகவும் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.
''சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளை சமரசம் செய்யக்கூடாது'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மம்தாவின் குற்றச்சாட்டு மற்றும் தொண்டு நிறுவனத்தின் வங்கிக்கணக்குகள் முடக்கம் குறித்து கருத்து தெரிவிக்க மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பின் அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி நிறுவனத்தை முடக்கி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது மத்திய அரசின் வேறு துறைகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.