கழுத்தை நெறித்து இரட்டைக் குழந்தைகள் கொலை - நாடகமாடிய தாய்!

Attempted Murder Crime Madhya Pradesh
By Sumathi 2 மாதங்கள் முன்

தனது இரட்டைக் குழந்தைகளை கொலை செய்து விட்டு தாய் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டைக் குழந்தை

மத்தியப் பிரதேசம், போபாலைச் சேர்ந்தவர் சப்னா. இவருக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், `என் குழந்தைகளைக் காணவில்லை, கண்டுபிடித்துக் கொடுங்கள்' என புகார் கொடுத்திருக்கிறார் தாய்.

கழுத்தை நெறித்து இரட்டைக் குழந்தைகள் கொலை - நாடகமாடிய தாய்! | Mother Strangulates 16 Day Old Twin Sons

அதில், ``செப்டம்பர் 23-ம் தேதி பெற்றோர் வீட்டுக்குச் செல்வதற்காக என்னுடைய குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறினேன். அப்போது பொதுக் கழிப்பறைக்குச் செல்ல நடைபாதையில் என்னுடைய இரட்டைக் குழந்தைகளை விட்டுச் சென்றேன்.

நாடகம்

திரும்பி வந்து பார்த்தபோது குழந்தைகளைக் காணவில்லை" எனக் குறிப்பிட்டிருந்திருக்கிறார். இது குறித்து, வழக்கு பதிவுசெய்த போலீஸார், நான்கு தினங்களாக குழந்தைகளை தேடி வந்தனர். இந்த நிலையில்,

கழுத்தை நெறித்து இரட்டைக் குழந்தைகள் கொலை - நாடகமாடிய தாய்! | Mother Strangulates 16 Day Old Twin Sons

குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட பிறகு, ​​சப்னா எதையோ மறைப்பதாக போலீஸாருக்குச் சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், சப்னா ``என்னுடைய கணவருக்கு ஆறு மாதங்களாக வேலை கிடையாது.

கொலை

பொருளாதார சூழ்நிலை காரணமாக என்னுடைய இரண்டு மகன்களுக்கும் உணவளிக்க முடியாது என்று பயந்து கொலைசெய்து விட்டேன். எனக்கு ஒரு மகளும் இருக்கிறாள். மூன்று குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்ள போகிறீர்கள் என மாமியார் என்னை கேலி செய்தார்.

அதனால்தான் இந்த முடிவெடுத்தேன்'' எனக் கூறியிருக்கிறார். அதனையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.