தாயை கொலை செய்து விடிய விடிய உடல் அருகே அமர்ந்திருந்த மகன்
தஞ்சையில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, விடிய விடிய இரத்தத்துடன் உடல் அருகே அமர்ந்திருந்த மன நலம் பாதிக்கப்பட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கும்பகோணம் அருகே ரம்யா நகரைச் சேர்ந்த சரஸ்வதி (70 ) என்பவரின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு காலமானார்.
இவரின் பிள்ளைகளில் ஆறு பேருக்கு திருமணமாவிட்டது. கடைசி மகன் பழனிக்கு (36) திருமணம் ஆகவில்லை.
மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனால் மனநலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தாயும், திருமண ஆகாத மகன் பழனியும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தாயுக்கும் மகனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது, இதில் ஆத்திரமடைந்த பழனி தாயின் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் வீட்டின் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது சரஸ்வதி கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பட்டீஸ்வரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் பழனியை கைது செய்தனர்.