பலாப்பழம் சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த 3 பேருக்கு வாந்தி, மயக்கம் - தாய், மகன் மரணம்

By Nandhini Jun 22, 2022 10:52 AM GMT
Report

கடலூர் மாவட்டம், புவனகிரி, ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். நேற்று வேல்முருகன் குடும்பம் பலாப்பழம் சாப்பிட்டுள்ளனர்.

பின்னர், அவர்கள் குளிர்பானம் குடித்துள்ளனர். கொஞ்ச நேரத்தில் திடீரென்று 2 குழந்தைகள் உள்பட 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே சரிந்தனர்.

தாய் - மகன் மரணம்

உடனடியாக அவர்களை மீட்ட அக்கம், பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனையடுத்து, அச்சிறுவனின் தாயும் உயிரிழந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், பலாப்பழத்துடன் குளிர்பானம் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சிறுவனின் பிரேத பரிசோதனைக்கு பிறகு உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பலாப்பழம் சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த தாய், மகன் மரணச் செய்தியைக் கேட்டு அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

பலாப்பழம் சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த 3 பேருக்கு வாந்தி, மயக்கம் - தாய், மகன் மரணம் | Mother Son Death