உன்னுடைய இரத்தத்தைக் குடிப்பேன்..பெற்ற தாயை கொடூரமாக தாக்கும் மகள் - வீடியோ வைரல்!
பெற்ற தாயை சொந்த மகளே கொடூரமாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா
குழந்தைகளைப் பெற்றெடுக்க எண்ணற்ற துன்பங்களைச் சகித்துக் கொண்டு, அவர்களை வளர்ப்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கும் தாயிடம், ஒரு மகள் கொடுமையின் எல்லைகளைமீறி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பெற்ற தாயைக் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மகள் தன் தாயை அடிப்பது மட்டுமின்றி, தன் தாயின் காலை கடித்து கொடுமை செய்கிறார்.
மேலும், தனது தாயை மீண்டும் மீண்டும் அடிக்கும் மகள் ஒருகட்டத்தில், "உன்னுடைய இரத்தத்தைக் குடிப்பேன்" என்று கூறி அடிக்கிறார். இதனால் தாய் வலியால் துடித்துக் கதறுகிறார். தன்னைக் காப்பாற்றுமாறு பெற்ற மகளிடம் தாய் கைகளைக் கூப்பி கெஞ்சுகிறார்.
தாக்கும் வீடியோ
அதற்கு அந்த பெண் , "நீ எத்தனை நாள் வாழ்வாய்?" என்று ஏளனமாகப் பேசிக்கொண்டே மகள் மீண்டும் துன்புறுத்துகிறார். தொடர்ந்து அந்த வீடியோவில் படுக்கையிலிருந்து இறங்கி வெளியில் செல்ல தாய் முயன்றும், மகள் பின்னால் இருந்து அடித்துத் துன்புறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தாயைக் கொடுமைப்படுத்திய மகளின் பெயர் ரீட்டா என்பது தெரியவந்தது.
இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் குடும்பச் சொத்துக்காகத் தாயை கொடூரமாகத் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரீட்டா மீது பிஎன்எஸ் 2023 பிரிவுகள் 115, 127(2), 296, 351(3), கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
