கஞ்சாவுக்கு அடிமையான மகன் - மிளகாய்பொடியை கண்ணில் போட்ட தாய்

Andhrapradesh ganjaaddictson motherpunishedtoherson
By Petchi Avudaiappan Apr 05, 2022 09:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

தெலங்கானாவில் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான மகனுக்கு தாய் கொடுத்த நூதன தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தின் கோடாட் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தனது 15 வயது மகன் கஞ்சாவுக்கு அடிமையானது தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த பெண் தன் மகனுக்கு தக்க தண்டனை கொடுக்க எண்ணினார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை கம்பத்தில் கட்டி வைத்து போதைக்கு அடிமையானதற்காக  கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளார்.

மேலும் மற்றொரு பெண்ணின் உதவியுடன் முகம் முழுவதும் மிளகாய்ப் பொடியை பூசினார். இதனால் கண்களில் ஏற்பட்ட எரிச்சலால் சிறுவன் அலறித்துடித்தான். தாயின் இந்த செயலைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மன்னித்து தண்டனையை கைவிடுமாறு பெண்ணிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் தனது மகன் கஞ்சா பழக்கத்தை கைவிடுவதாக உறுதி அளித்தால்தான் தண்டனையை கைவிடுவேன் என்று காட்டமாகஅப்பெண்  தெரிவித்துள்ளார். இறுதியாக தான் கஞ்சா புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதாக சிறுவன் உறுதியளித்ததை அடுத்து அந்த பெண் தனது மகனின் கட்டுகளை அவிழ்த்துவிட்டார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.