2 குழந்தைகளின் தாய்... தன் கணவனின் தங்கையை திருமணம் செய்தார்... - பரபரப்பு சம்பவம்...!
2 குழந்தைகளின் தாய் தன்னுடைய கணவரின் தங்கையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் வயப்பட்ட 2 குழந்தைகளின் தாய்
பீகார், சமஸ்திபூர் மாவட்டம், ரோசராவைச் சேர்ந்தவர் பிரமோத் தாஸ். இவருடைய மனைவி 32 வயதான சுக்லா தேவி. இத்தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் 6 மாதங்களுக்கு முன்புதான் இவர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
சுக்லா தன்னுடைய கணவரின் தங்கையுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் சுக்லாவிற்கு கணவர் தங்கை மேல் காதல் மலர்ந்தது. தன் காதலை சோனிவிடம் தெரிவித்துள்ளார். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த சோனி பிறகு ஓ.கே. சொல்லியுள்ளார்.

கணவனின் தங்கையை திருமணம் பெண்
தன் கணவரை விட்டுவிட்டு, கணவரின் சகோதரி சோனி தேவியை (18) திருமணம் செய்து கொண்டுள்ளார் சுக்லா தேவி. இதனையடுத்து, சுக்லாவும், சோனி தேவியும் கணவன்-மனைவியாக வாழத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து சுக்லா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"நாங்கள் ஒருவரையொருவர் காதலித்தோம். நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்குப் பிறகு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். காதலின் வீடு இது இதயம் என்று நான் நம்புகிறேன். நாங்கள் இருவரும் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து விரும்புகிறோம். உண்மையான அன்பு உள்ளது சோனி மிகவும் நல்லவர் என்றார். இந்த முழு விஷயத்தையும் கேட்டு புரிந்துக்கொண்ட சுக்லாவின் கணவர் தாஸ் இதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டார்.
இதை சுக்லா எதிர்பார்க்கவில்லை. எனவே திருமணமான புது ஜோடிகள் வாழ்க்கையை ரசித்து வாழ தொடங்கியுள்ளனர். ஆனால், தாஸின் தாயுக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.
இத்திருமணத்தால் ஊரில் தன்னைப் பற்றி அவதூறாக பேசுவதாக கூறி தாஸின் தாய் தனது மகள் சோனுவை வலுக்கட்டாயமாக சுக்லாவிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றார்.
இதனையடுத்து, சுக்லா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து போலீஸ் நிலைய ஆய்வாளர் கிருஷ்ண பிரசாத் கூறுகையில்,
"இப்புகார் தொடக்கத்தில் வினோதமாக இருந்தது. அதன் பிறகுதான் புகாரில் உள்ள முக்கியத்துவம் தெரிந்தது. தற்போது இப்புகார் குறித்து விசாரிக்க ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை காவல்துறையில் கேட்டுள்ளோம். சுக்லாவின் காதல் விசித்திரமானதாக உள்ளது.
அவர் தன்னை ஆண் போல காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தலைமுடியை வெட்டி, நடை, உடை பாவனை என அனைத்திலும் ஆணாகவே மாறியுள்ளார். பெயரையும் சுக்லா தேவி என்பதற்கு பதிலாக சூரஜ் குமார் என்று மாற்றியுள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.