அபார்ட்மெண்ட் பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை - அதிர்ச்சி செய்தி
சில தினங்கள் முன்பு சென்னை அபார்ட்மெண்ட் ஒன்றில் குழந்தை ஒன்று பால்கனியில் தவறி விழுந்த வீடியோ வைரலானது.
தவறி விழுந்த குழந்தை
சென்னை திருமுல்லைவாயலில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரையில் தவறி விழுந்துள்ளது கைக்குழந்தை. உடனே அக்குடியிருப்பு வாசிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மீட்கும் பதற வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பார்ப்போரை பதறவைத்தது.
வைரலான அந்த வீடியோவில், பால்கனியில் தவறி விழுந்த குழந்தை கீழே விழும் நிலையில், மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. தவறி விழும் பட்சத்தில் குழந்தையை பிடிக்க பலரும் போர்வையை விரித்து நின்றனர்.
கீழ் மாடியில் இருந்து ஜன்னல் வழியாக சிலர் தவறி விழ இருந்த குழந்தையை போராடி, சிறிது நேரம் கழித்து மீட்டனர்.
தாய் தற்கொலை
குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது, குழந்தையின் தாய் ரம்யா (33), திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குழந்தை சம்பவத்திற்கு பிறகு, வெங்கடேஷ் ரம்யா தம்பதியினர், காரமடைக்கு சென்றுள்ளனர். சில காலமாகவே மன அழுத்தத்தில் இருந்த ரம்யா வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது.