கதற கதற தாயை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த கொடூர மகள் - நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்
உத்தரபிரதேசம், நெய்டாவில் தாயும் (37), மகளும் (14) அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். 37 வயதான அப்பெண் கணவரை விட்டு பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்தார்.
மகள் எப்ப பார்த்தாலும், வீட்டு வேலை செய்யாமல் செல்போனை நோண்டிக் கொண்டே இருந்து வந்துள்ளார். இதனால் தாய், மகளை கண்டித்து வந்துள்ளார். ஆனாலும், அப்பெண் தாய் சொல்வதை கேட்காமல் செல்போனை நோண்டிக்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி வீட்டில் உள்ள அழுக்கு பாத்திரங்களை தாய், மகளிடம் கழுவி வைக்க சொல்லியிருக்கிறார். ஆனால், நீண்ட நேரமாக பாத்திரங்களை மகள் கழுவாமல் செல்போனையே நொண்டிக்கொண்டிருந்தாள்.
இதனால், கோபமடைந்த தாய் மகளை நீண்ட நேரமாக திட்டிக் கொண்டிருந்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மகள் அங்கிருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து தாயின் தலையில் ஓங்கி அடித்து தாக்கினார்.
இதனால், அலறியபடியே தலையைப் பிடித்துக் கொண்டு தாய் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் வீட்டிற்கு ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக அந்தத் தாய் இறந்து போனார்.
இது குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் மகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த மகள், என் தாயை யாரோ தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார்கள் என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு அந்த வழியாக இருக்கும் சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால், மகள் சொல்வது போல் யாரும் அந்த பக்கம் வராததால் மகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மீண்டும் மகளிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டபோது, தாயை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.