மூத்த குழந்தைக்கு சேமியாவில் விஷம், ஒன்றரை வயது மகனுக்கு எலிப்பொடி ; கள்ளக்காதலுடன் வாழ பெற்ற பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்

motherarrested coldbloodmurder infidelity motherpoisonsinfant marthandamcrime kanniyakumaricrime
By Swetha Subash Apr 07, 2022 08:33 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

கள்ளக்காதலுடன் உல்லாசமாக வாழ பெற்ற பச்சிளம் குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(34) கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா( 21). இவர்களுக்கு சஞ்சனா என்ற மூன்றரை வயது பெண் குழந்தை, ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண் திடீரென எலிக்காக வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூலி வேலைக்கு சென்றிருந்த தனது கணவர் ஜெகதீஷ்க்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் குழந்தை சரணை அருகிலுள்ள மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் குழந்தை சரணின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூத்த குழந்தைக்கு சேமியாவில் விஷம், ஒன்றரை வயது மகனுக்கு எலிப்பொடி ; கள்ளக்காதலுடன் வாழ பெற்ற பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய் | Mother Kills Infant By Poisoning Over Infidelity

மேலும் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் குழந்தை விஷப்பொடியை குழந்தையே சாப்பிட்டதற்கான அறிகுறி எதுவுமில்லை எனவும் குழந்தையின் உயிரிழப்பு சந்தேகமளிப்பதாகவும் கூறி தாய் தந்தை இருவரையும் காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது கார்த்திகாவின் செல்போனிற்கு வந்து சென்ற அழைப்புகள் அழிக்கபட்டிருந்த்தை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் மாரயபுரம் பகுதியை சேர்ந்த காய்கறி கடை நடத்தும் சுனில் என்பவருடன் கார்த்திகா அதிகநேரம் பேசியிருப்பது தெரிய வந்தது.

மேலும் குழந்தை எலிப்பொடி சாப்பிட்ட சம்பவம் நடந்த நேரத்தில் இருவரும் பலமுறை பேசியது தெரிய வரவே கார்திகாவிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தினர்.

மேலும்,  சுனிலை காவல் கஸ்டடியில் விசாரித்ததில் கார்திகாவிற்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரியாமல் அவர் பழகியதாகவும் அந்த தகவலை தெரிந்ததும் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கார்த்திகா வாக்குமூலத்தில் காதலில் மூழ்கி இரண்டு குழந்தைகளை கொன்றால் சுனில் ஏற்றுகொள்வான் என நினைத்து சந்தேகம் வராமல் இருக்க சில நாட்களாக வீட்டில் எலி தொல்லை இருப்பதாக கணவனிடம் கூறி வீட்டை சுற்றி பாலிடா பொடியை எலிசாகுவதற்காக தூவி வந்ததாகவும்,

அதை ஊர்மக்கள் பார்வைக்கு பார்கும்படி நடந்து கொண்டதாகவும், பின்னர் சம்பவத்தன்று குழந்தைகள் விரும்பி உண்ணும் சேமியா உப்பு மாவில் கலந்து கொடுத்தால் அவர்களது உடலில் இருந்து விஷத்தின் வாசனை வரவில்லை எனவும் மூத்த குழந்தை குறைவாக உப்புமா சாப்பிடதால் தப்பித்து கொண்டது என அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கிறார்.

மூத்த குழந்தைக்கு சேமியாவில் விஷம், ஒன்றரை வயது மகனுக்கு எலிப்பொடி ; கள்ளக்காதலுடன் வாழ பெற்ற பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய் | Mother Kills Infant By Poisoning Over Infidelity

அந்த விஷயம் தாமதமாக தெரிய வரவே அந்த குழந்தைக்கு திருவனந்தபுரம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இதனிடையே மார்தாண்டம் காவல்நிலையத்தில் விசாரணை நடப்பதுடன் பிரேத பரிசோதனை ஏற்பாடுகளும் நடக்கிறது.