ராஜ்ஜியம் பட பாணியில்.. ஊசியால் காற்றை ஏற்றி கொலை - தாயே மகனை கொன்ற கொடூரம்!
ஊசி மூலம் வெறும் காற்றை ஏற்றி மருமகளுடன் சேர்ந்து தாய் மகனை கொன்றது அதிர்ச்சி அளித்துள்ளது.
ஊசி கொலை
திருச்சி சஞ்சீவி நகரை சேர்ந்தவர் குணசேகரன் (34). இவர் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இவருக்கு சுலோச்சனா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த சூழலில், குணசேகரன் மதுபோதைக்கும், கஞ்சாவுக்கும் அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
எனவே தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி சுலோச்சனா மற்றும் தாய் காமாட்சி ஆகியோரிடம் தகராறில் ஈடுபடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். அப்படி, குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குணசேகரன், தனது மனைவி சுலோச்சனா தாய் காமாட்சி ஆகியோருடன் மீண்டும் தகராறு செய்துள்ளார்.
அதன் பிறகு வீட்டிற்குள் சென்று தூங்கியுள்ளார். அப்பொழுது காமாட்சியின் உறவினர்களான திருநங்கை விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ (19), திருநங்கை குபேந்திரன் என்கிற நிபுயா (19) மற்றும் விஜயகுமார் (48) ஆகிய மூவரும் குணசேகரனின் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து வீட்டிலிருந்த காமாட்சியும் சுலோச்சனாவும் வீட்டிற்கு வெளியில் வந்து யாரும் வராமல் காவல் காத்துள்ளனர். இந்த நிலையில், உள்ளே சென்ற அவர்கள் மூவரும், ராஜ்ஜியம் என்ற விஜயகாந்த் திரைப்படத்தில் வருவது போல, குணசேகரனின் உடலில் காலி ஊசியை செலுத்தியுள்ளனர்.
தாயை கொலை செய்து, தங்கையை ரூமில் அடைத்து, ஹாலில் உணவு சாப்பிட்ட மகன்.... - நெஞ்சம் பதற வைத்த அதிர்ச்சி சம்பவம்
கொடூரம்
பின்னர் மூவரும் துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டு நாடகம் ஆடியுள்ளனர். இதன் பிறகு தாய் காமாட்சி போலீசாரிடம் தனது மகன் தற்கொலை செய்து கொண்டான் என புகார் அளித்திருக்கிறார்.
புகாரின் அடிப்படையில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் குணசேகரனின் எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் சோதனை செய்த போது கொலை நடந்த சம்பவத்தை தெரிந்துகொண்டனர்.
அதன்பேரில் இது தற்கொலை அல்ல கொலை என்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, காவல் நிலைய போலீசார் காமாட்சி, சுலோச்சனா, விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ , குபேந்திரன் என்கிற நிபுயா, விஜயகுமார் ஆகிய ஐவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை கைது செய்துள்ளனர்.