ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய்! விசாரணையில் அம்பலம்

Salem
By Fathima Jun 13, 2026 06:25 AM GMT
Report

சேலத்தில் ஒன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தின் தலைவாசல் அருகே வரகூர் தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் திருமலை வாசுதேவன், இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடுக காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மூத்த குழந்தை தந்தையுடனும், இரண்டாவது குழந்தை தாயுடன் வசிக்கின்றனர், இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக குழந்தைக்கு வலிப்பு வந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார், ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய்! விசாரணையில் அம்பலம் | Mother Kills Baby Salem Incident

இதுதொடர்பாக போலிசார் விசாரணை மேற்கொண்டதில் லலிதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது, குழந்தையை இடையூறாக இருந்ததால் பூச்சி மருந்து கொடுத்து குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடியுள்ளார் என்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து தாய் லலிதாவை கைது செய்த போலிசார் சிறையில் அடைத்தனர்.