பிறந்து 29 நாட்கள் தான் - பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்!
குழந்தையைப் பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடும்ப தகராறு
சென்னை, கொரட்டூர் நாடோடி பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் குமரேசன்(32). இவர் சாலையோரங்களில் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே திருமணமான சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சங்கீதா கர்ப்பமான நிலையில், அவரை புதுவை கிருமாம்பாக்கத்துக்கு அழைத்து வந்துள்ளார். அங்கே உள்ள சமுதாயக் கூடத்திற்கு அருகே உள்ள காலி இடத்தில் வசித்து வந்துள்ளனர். தொடர்ந்து, சங்கீதாவுக்குக் கடந்த மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குழந்தை கொலை
குளக்கரையில் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தவர்கள் பார்க்கையில் திடீரென குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில், கடற்கரையில் குழந்தையின் கால் ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மண்ணில் தெரிந்ததாக சிலர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் விசாரணையில், குமரேசனின் குழந்தை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த கணவன், மனைவியை ஆபாச வார்த்தைகளால் திட்டி குழந்தை யாருடையது என்று கேட்டுள்ளார்.
இதனால் மணமுடைந்த பெண் குழந்தையை புதைத்து கொன்றதாக ஒப்புக்கொண்டார். அதனையடுத்து சங்கீதாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.