மருமகளை விரட்ட... கொரோனாவை பரப்பிய மாமியார்!
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாமியார் ஒருவர் பழிவாங்கும் விதமாக தமது மருமகள் மற்றும் பேரக்குழந்தையை கட்டிப்பிடித்து தொற்றை பரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டம் நெமலிகுட்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
திருமாண பென்ணுக்கும் அவரது மாமியாருக்கும் இவருக்கும் தகராறு ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு தனிமையில் இருந்து வந்த மாமியாரிடம் மருமகள் தனி மனித இடைவெளியினை கடைபிடித்துள்ளார்.
. இனால் ஆத்திரமடைந்த மாமியார் தனது மருமகளையும் பேரக்குழந்தையையும் பாசத்துடன் கட்டிப்பிடிப்பது போல் நடித்து கொரோனா நோயை பரப்பியுள்ளார்.
இதில் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட மருமகளை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
மாமியாரின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த மருமகள் வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி தனது சகோதரர் வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்
. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் தான் தாயின் செயலை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு மாமியாராக இருந்தால்மண்ணாங் கட்டி இருந்தால்கூட அதிகாரம் செய்யும் என்று .
ஆனால் இந்த சம்பவம் குரோதத்தின் உச்சம் என இணைய வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.