மருமகளின் தலையை வெட்டி காவல் நிலையம் எடுத்துச் சென்ற மாமியார் - பதறிப்போன போலீசார்

Andhra Pradesh
By Thahir Aug 12, 2022 10:20 AM GMT
Report

மருமகளை கொலை செய்து தலையை தனியாக துண்டித்து காவல் நிலையம் எடுத்துச் சென்ற மாமியார் சரணடைந்தார்.

மருமகளின் தலையை துண்டித்த மாமியார் 

ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கொத்தாபேட்டை ராமாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுப்பம்மா. இவருடைய மருமகள் வசுந்தரா.

இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. வசுந்தராவுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சுப்பம்மா சந்தேகம் அடைந்துள்ளார்.

இதனால் குடும்பத்தின் சொத்தை அவரது பெயருக்கு மாற்றிவிடுவார் என்றும் பயந்துள்ளார். சுப்பம்மாவும் மற்ற உறவினர்களும் சேர்ந்து மதிய உணவு சாப்பிட வருமாறு கூறி வசுந்தராவை தங்கள் வீட்டிற்று அழைத்துள்ளனர்.

மருமகளின் தலையை வெட்டி காவல் நிலையம் எடுத்துச் சென்ற மாமியார் - பதறிப்போன போலீசார் | Mother In Law Who Cut Off Her Daughter In Law Head

அங்கு வந்த வசுந்தராவை அரிவாளை கொண்டு கதற கதற கொலை செய்துள்ளார் மாமியார் சுப்பம்மா. பின்னர் மருமகளின் தலையை தனியாக வெட்டி எடுத்துக் கொண்டு சுமார் 6 கி.மீ துாரம் காவல் நிலையத்திற்கு நடந்து வந்துள்ளார்.

சுப்பம்மா கையில் தலையுடன் வந்ததை கண்டு காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.