மருமகளை கொடூர நிலையில் சித்ரவதை செய்து உறுப்புகளில் சூடுவைத்த மாமியார் - பகீர் சம்பவம்
மாமியார் தனது மருமகளைக் கொடூரமாக சித்தரவதைச் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வரதட்சனை கொடுமை
மத்தியப் பிரதேசம், விதிஷா பகுதியைச் சேர்ந்த பெண் சுகி செவானியா கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துள்ளார். கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், மனைவியை வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், விரக்தியடைந்த பெண், கணவர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மாமியார் வெறிச்செயல்
இதனால் மனைவியை காணவில்லை என கணவர் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன்பின், மனைவி தாய் வீட்டில் இருப்பதை அறிந்த மாமியாரும், மைத்துனரும் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
வீட்டிற்கு வந்தவுடன் கணவன், மாமியார், மைத்துனர் ஆகியோர் சேர்ந்து அந்தப் பெண்ணை ஒரு நாள் முழுவதும் அறை ஒன்றில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரை சித்திரவதை செய்ய அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி சூடான இரும்பு கம்பியால் பெண்ணின் உடல் மற்றும் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளார்.
இதனால் அலறிய பெண்ணின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து புகாரளித்ததில் போலீஸார் மூவரையும் கைது செய்துள்ளனர்.