மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள் - 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
திருப்பூரில் மாமியாரை மருமகள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் திலகர் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மங்காத்தா. பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்ய ராமசாமி முடிவெடுத்ததால் ராமசாமியை விட்டு மங்காத்தா பிரிந்தார். இதையடுத்து சகுந்தலா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ராமசாமிக்கு கார்த்திக், சரவணகுமார் என்று இரண்டு மகன்கள் பிறந்தனர்.
இரண்டாவது மனைவி சகுந்தலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், முதல் மனைவி மங்காத்தாவை அழைத்து வந்து விட்டார். மூத்த மகன் கார்த்திக் அதே பகுதியை சேர்ந்த பிருந்தா என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கார்த்தியின் தம்பி சரவணகுமார், பிருந்தாவின் தங்கை லாவண்யாவை காதலித்து வந்துள்ளார். இருவரின் காதல் இரு குடும்பத்திற்கும் தெரியவந்துள்ளது. ஆனாலும் திருமணம் என்ற பேச்சு வரும் நிலையில், சரவணகுமாருக்கும், லாவன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.
இதனால் சரவணகுமார், லாவண்யாவை பேசச்சொல்லி, அவரது அக்கா பிருந்தாவிடம் வற்புறுத்தி வந்திருக்கிறார். இது பிருந்தாவின் பெற்றோருக்கும், பிருந்தாவின் தம்பிக்கும் தெரிய வந்திருக்கிறது. அவர்கள் ஆத்திரப்பட்டு சரவணகுமார் குடும்பத்தை பேசிவர, விசயம் பெரிதாவதை உணர்ந்த இரு குடும்பத்தாரும் அமர்ந்து பேசி இருக்கிறார்கள்.
பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்திருக்கிற. மருமகள் பிருந்தா மாமியார் மங்காத்தா பிடித்து கீழே தள்ளி விட்டிருக்கிறார் . மோதிய வேகத்தில் மங்காத்தா மரத்தில் மோதி கீழே விழுந்து இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கியதால் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து உள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து விட்டார்.
இதையடுத்து ராமசாமி அளித்த புகாரின் பேரில் மருமகள் பிருந்தா, அவரது தம்பி, தந்தை அன்பழகன் உறவினர் ஸ்ரீராம் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு வேலம்பாளையம் போலீசார்