மருமகளுடன் உல்லாசமாக இருந்த மாமனார் - நேரில் பார்த்த மாமியாருக்கு நேர்ந்த துயரம்
மருமகளும் மாமனாரும் உல்லாசமாக இருந்ததை பார்த்த மாமியார் கொல்லப்பட்டுள்ளார்.
மாமியார் மாயம்
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியை சேர்ந்த குர்கு யாதவ் என்பவர் வாட்ச்மேன் ஆக பபணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி கீதா தேவி (50). இந்த தம்பதியருக்கு திருமணமான மகன் உள்ளார்.
இந்நிலையில் கீதா தேவி கடந்த வியாழக்கிழமை, மாலையில் இருந்து காணாவில்லை. அடையாளம் தெரியாத நபருடன் கீதா தேவி இரு சக்கர வாகனத்தில் சென்றதாக, மருமகள் குடியா தனது கணவர் தீபக்கிடம் தெரிவித்தார்.
கழிவறையில் சடலம்
நீண்ட நேரமாகியும் கீதா தேவி வீடு திரும்பாத நிலையில், குர்கு யாதவ் தனது மனைவி கீதா தேவி காணாமல் போய்விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசரணையை தொடங்கினர்.
இது குறித்து கீதா தேவியின் கணவர், மகன் மற்றும் மருமகளிடம் காவல்துறையினர் தனி தனியாக விசாரணை நடத்தினர், விசாரணையில் முன்னுக்கு பின்னர் முரணாக தகவலை அளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் குர்கு யாதவின் வீட்டை சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் கழிவறை தொட்டியில் கீதாதேவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரதே பரிசோதனை முடிவில், தலையில் காயம் இருந்தது தெரிய வந்துள்ளது.
மருமகளுடன் உல்லாசம்
இதை தொடர்ந்து நடத்திய விசாரணையில், கடந்த இரு ஆண்டுகளாக குர்கு யாதவ் தனது மருமகள் குடியாவுடன் கள்ள உறவில் இருந்துள்ளார். கடந்த வாரம் வீட்டில் யாரும் இல்லாத போது மாமனாரும் மருமகளும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டிற்கு வந்த கீதா தேவி இதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் இதை தனது மகன் தீபக்கிடம் கூற உள்ளதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து குடியா தனது மாமியாரின் தலையில் செங்கல் மற்றும் மரக்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். அதன் பின்னர் உடலை மறைத்து வைத்து விட்டு மாமியார் மாயமாக போனதாக நாடகமாடியுள்ளார். இதனையடுத்து குர்கு யாதவ் மற்றும் குடியாவை கைது செய்தனர்.