மாமியாரை அடித்தே கொன்ற கொடூர மருமகள் - கோர சம்பவம்!
திருப்பூர் அருகே மாமியாரை அடித்தே கொன்ற மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் திலகர் நகரை சேர்ந்தவர் ராமசாமி, இவரது மனைவி மங்காத்தா. பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால், மங்காத்தாவை விட்டு பிரிந்த ராமசாமி, சகுந்தலா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கார்த்திக், சரவணக்குமார் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மனைவி எதிர்பாராதவிதமாக மரணத்துவிட்டதால், மீண்டும் முதலாவது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார் ராமசாமி.
இவர்களது முதல் மகன் கார்த்திக் பிருந்தா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது தம்பி சரவணக்குமாரும், பிருந்தாவின் தங்கை லாவண்யாவும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த விஷயம் பிருந்தாவின் வீட்டிற்கு தெரியவந்ததால், இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில் பிருந்தா மாமியார் மங்கத்தாவை இழுத்து பிடித்து கீழே தள்ளியுள்ளார்.
இதில் மரத்தில் மோதிய மங்காத்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிருந்தாவின் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.