என்ன கொடுமை சார் இது - சாதி பெயரை சொல்லி மாமியாரை டார்ச்சர் செய்த மருமகள் கைது

Arrest Mother In Law Daughter In Law
By Thahir Sep 29, 2021 05:43 AM GMT
Report

தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத் அருகே உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் 65 வயதுடைய ஹேமலதா என்ற பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் கடந்த 2017ஆம் ஆண்டில் தனது மகன் ஸ்ரீகாந்துக்கும், சிந்து ரெட்டி என்கிற பெண்ணை திருமணம் நடத்தி வைத்ததாகவும், தானும் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

திடீரென்று ஒரு நாள் தனது மருமகள் தன்னை சாதியின் பெயரில் திட்ட ஆரம்பித்தார் என்றும், அதன் பின்னர் அதையே அவர் தொடர்ந்து செய்து வருகிறார் என்றும் குடும்பத்திற்கு தான் பாரமாக இருப்பதாக மோசமாக திட்டி வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் தனது மகனும் மருமகளும் சேர்ந்து தன்னை வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் அதனால் தான் அனாதையாக இருப்பதாகவும் அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார்.

தனக்கு சொந்தமாக இருந்த வீட்டை விற்று மகனிடம் கொடுத்ததாகவும், மகன் அந்த பணத்தை மருமகளிடம் கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், வீட்டை விற்று பணம் தரும் வரைக்கும் தன்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள்.

பணம் அவர்கள் கைக்கு சென்றவுடன் தான் தன்னை துன்புறுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்று தனது வேதனையை தெரிவித்திருக்கிறார்.

இந்த புகாரில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மையா என்பது குறித்து தற்போது போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த புகார் முழுக்க முழுக்க உண்மைதான் என்பது தெரிய வந்திருப்பதால் ஹேமலதாவின் சொத்தை அபகரித்து அவரை சாதியின் பெயரால் வன்கொடுமை செய்த மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மீது சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் மருமகளையும் மகனையும் கைது செய்துள்ளனர்.