தினமும் குடித்துவிட்டு வந்த மருமகன் - மறக்க முடியாத பரிசு கொடுத்த மாமியார்!
Chennai
Crime
By Sumathi
மருமகனை கூலிப்படை ஏவி மாமியார் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
குடிப்பழக்கம்
சென்னை. அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு(30). இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.
மாமியார் செயல்
பாபு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாமியார் ரசீதா, சஞ்சய் சாய் என்பவரை ஏவி, மருமகன் பாபுவை தாக்கியுள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமியார் ரசீதா மற்றும் சஞ்சய் சாயை கைது செய்தனர்.