மாமியாருடன் தனிமையில் உல்லாசம் - ஸ்கெட்ச் போட்டு மருமகன் செய்த வெறிச்செயல்!
தனது மாமியாருடன் தகாத உறவில் இருந்த நண்பனை கொல்ல முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.
கொலை முயற்சி
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் கோபி (26). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கவுதம் (22) என்ற நண்பர் இருக்கிறார். கடந்த 19ம் தேதி இரவு கோபி வீட்டிற்கு வந்த கவுதம், அவரை மறைத்து வைத்திருந்த சுத்தியால் தலையின் பின்பக்கமாக பயங்கரமாக பலமுறை தாக்கியுள்ளார்.
இதில் கோபி வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்துள்ளார். உடனடியாக கவுதம் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். கோவையின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த கோவையை மீட்டு புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளி கைது
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கவுதமின் மாமியாரான சசிகலாவுக்கும் (40), திருமணமாகாத கோபிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த கவுதம் பலமுறை கோபியை எச்சரித்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து அவர்கள் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கவுதம், கோபியை கொள்ள முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி தன்வந்தரி நகர் போலீசில் கவுதம் சரணடைந்தார். இதனையடுத்து ஆரோவில் போலீசார் கவுதம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.