குட்டியை துாக்கிச் சென்ற ஊழியர்கள் - பின்னால் ஓடிய தாய் குதிரை
மதுரையில் மாநகராட்சியினர் வாகனத்தில் பிடித்துச்சென்ற தனது குட்டியை பின்தொடர்ந்து ஒடிச்சென்ற தாய்க்குதிரையால் நெகிழ்ச்சி.
தொடர்ந்து எழுந்த புகார்கள்
மதுரை மாநகர் பகுதியின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள், குதிரைகள் சுதந்திரமாக பகல் மற்றும் இரவு நேரங்களில்வலம் வருவதால் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்து வரக்கூடிய நிலையில் மதுரை மாநகரில் இருக்கக்கூடிய சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கால்நடைகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்டவை சாலைகளில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள நிலையில் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில்,
மதுரை வைகை தென்கரை பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்திற்கு சுற்றித்திரிந்த குதிரைகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் குட்டி குதிரை ஒன்றை பிடித்து வாகனத்தில் ஏற்றிய போது தாய்க்குதிரை தனது குட்டியை பிரிய மனமின்றிய நிலையில் வாகனத்தில் ஏற மறுத்து வாகனத்தின் பின்னாலேயே மாநகராட்சி கால்நடை காப்பகம் வரை வாகனத்தின் பின்னாலேயே ஓடி வந்தது.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.