சிக்கிக்கொண்ட மகன்; காப்பாற்றி விட்டு உயிரை விட்ட தாய் - கள்ளக்குறிச்சியில் சோகம்!

Tamil nadu Death Kallakurichi
By Jiyath Sep 29, 2023 02:43 AM GMT
Report

நீர்வீழ்ச்சியில் சிக்கிய மகனை காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

காப்பாற்றிய தாய்

கள்ளக்குறிச்சி மாவட்டம் லக்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் மற்றும் மனைவி மாணிக்கவள்ளி 30). இவர்களுக்கு கிஷோர்(13), கிரண்குமார் (12) என்ற இரு மகன்கள் உள்ளனர். கல்வராயன் மலையில் பெய்த மழையால் அடிவாரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

சிக்கிக்கொண்ட மகன்; காப்பாற்றி விட்டு உயிரை விட்ட தாய் - கள்ளக்குறிச்சியில் சோகம்! | Mother Gave Her Life To Save Her Son Kallakurichi

இதனால் மாணிக்கவள்ளி, தனது 2 மகன்கள் மற்றும் தோழியான ராதிகாவுடன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றார். நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்தபோது மகன் கிரண்குமார், ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் சிக்கி தத்தளித்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் துரிதமாக செயல்பட்டு தனது மகனை காப்பாற்றி, பாறையில் நின்றிருந்த தோழி ராதிகாவிடம் கொடுத்தார்.

பரிதாப பலி

அடுத்த நொடியே நீர்வீழ்ச்சியில் இருந்து வந்த தண்ணீர், மாணிக்கவள்ளியை ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றது. அங்கு அவர் நீரில் மூழ்கினார். உடனே ராதிகா தண்ணீரில் குதித்து ராதிகாவை தேடிப்பார்த்தும், கிடைக்கவில்லை.

சிக்கிக்கொண்ட மகன்; காப்பாற்றி விட்டு உயிரை விட்ட தாய் - கள்ளக்குறிச்சியில் சோகம்! | Mother Gave Her Life To Save Her Son Kallakurichi

பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தேடுதலில் ஈடுபட்டனர். 1 மணி நேரத்திற்கும் மேலான தேடுதலின் முடிவில் மாணிக்கவள்ளி பிணமாக மீட்கப்பட்டார்.

அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.