தாய், தந்தையை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்த மகன் - கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் குட்டன் (60 ). இவரது மனைவி சந்திரிகா (55 ). இவர்களுடைய மகன் அனீஷ் (30). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
ஆனால், அனீஷூக்கு குடிபழக்கம் உள்ளது. இதனால், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வருவார்.
இந்நிலையில், நேற்று காலையில் அனீஷ் வழக்கம் போல் குடித்துவிட்டு பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். இதனால், பெற்றோருக்கும், அனீஷூக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
தினமும் நடப்பதுதானே என்று நினைத்துவிட்டு, பெற்றோர்கள் இருவரும் வயலுக்கு சென்று வேலை பார்த்துள்ளனர். ஆனால், பெற்றோர் மீது கோபத்தில் இருந்த அனீஷ், நேற்று காலை 9 மணிக்கு அரிவாளை எடுத்துக் கொண்டு வயலுக்குச் ஓடினார்.
மகன் அரிவாளை எடுத்து வருவதைப் பார்த்த பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
ஆனால், அனீஷ் அவர்களை விரட்டிச் சென்று தாயையும், தந்தையையும் சரமாரியாக வெட்டினான். குட்டன், சந்திரிகாவும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சரிந்தனர்.
சம்பவ இடத்திலேயே இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அங்குள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அனீஷ் போலீசாருக்கு போன் செய்து, நான்தான் என் பெற்றோரை வெட்டி கொலை செய்து விட்டேன் என்று கூறி தலைமறைவாகிவிட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் அனீஷை தேடி வருகின்றனர். பெற்ற மகனே தாய், தந்தையை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் திருச்சூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan