கேரளத்தில் தாய் மற்றும் குட்டி யானை காவல் நிலையத்தை வேட்டையாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்
ஒரு தாய் மற்றும் குட்டி யானை காவல் நிலையத்திற்குள் புகுந்து வேட்டையாடிய வீடியோவை கேரள காவல்துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
யானைகள் அதிகளவில் காணப்படும் கேரளா மாநிலம் இந்தியாவின் முக்கிய சுற்றுலா மையமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு ட்விட்டர் பதிவில், ஒரு தாய் மற்றும் குட்டி யானை காவல் நிலையத்திற்குள் புகுந்து வேட்டையாடிய வீடியோவை கேரள காவல்துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
கேரளாவில் உள்ள பரம்பிக்குளம் காவல்நிலையத்தில் இந்த இரு யானைகளும் சேர்ந்து இரும்பு கம்பியால் உருவாக்கப்பட்ட கிரில் கேட்டை வளைக்கின்றன.
"காவல் நிலையத்திற்கு வந்த தாயும் குழந்தையும் என்ன செய்தார்கள் என்பதை அறிய வீடியோவைப் பாருங்கள்" என்று பரம்பிக்குளம் காவல் நிலைய அதிகாரிகள் மலையாளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
யானை இரும்பு கேட்டை உடைக்க முயலும் போது குபேரன் படத்தில் வரும் "சதீர்த்தியோ" என்ற பாடலையும் இந்த வீடியோ காட்சியுடன் இணைத்துள்ளனர்.
தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
പറമ്പിക്കുളം പോലീസ് സ്റ്റേഷനിൽ എത്തിയ അമ്മയും കുഞ്ഞും ചെയ്തതെന്തന്നറിയാൻ വീഡിയോ കാണുക.#keralapolice pic.twitter.com/ZYZVkYH1G9
— Kerala Police (@TheKeralaPolice) January 2, 2022