தாய் உயிரிழந்து கூட தெரியாமல் பிணத்துடன் 5 நாட்களாக வாழ்ந்து வந்த மகன் - கண் கலங்க வைக்கும் சம்பவம்

son Tragic incident தவிப்பு உயிரிழப்பு மகன் தாய் mother-death சோகச் சம்பவம்
By Nandhini Mar 14, 2022 04:27 AM GMT
Report

திருப்பதி, வித்யா நகரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் கணவரை பிரிந்து தன்னுடைய 10 வயது மகன் ஷியாம் கிரோருடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ராஜலட்சுமி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 8ம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார். சியாமும் தாய்யுடன் படுத்து தூங்கினான்.

மறுநாள் காலை ஷியாம் எழுந்தான். தாயை எழுப்பினான். ராஜலட்சுமி எழுந்திருக்கவே இல்லை. பிறகு பள்ளிக்கு கிளம்பி புறப்பட்டு சென்று விட்டான்.

தாய் உயிரிழந்து கூட தெரியாமல் பிணத்துடன் 5 நாட்களாக வாழ்ந்து வந்த மகன் - கண் கலங்க வைக்கும் சம்பவம் | Mother Death Son Tragic Incident

ஷியாம் மதிய உணவு சாப்பிட்டாமல் பசியோடு இருந்துள்ளான். அன்று இரவு வீட்டில் இருந்த பழங்கள் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் அம்மாவின் அருகிலேயே படுத்து தூங்கினான். இப்படியாக தினமும் பள்ளிக்கு போவது, இரவு வந்து தூங்குவது என்று ஷியாம் தாயுடனே இருந்து வந்துள்ளான்.

இந்நிலையில், இன்று காலை ராஜலட்சுமி வீட்டிலிருந்து துர்நாற்றம் அடித்தது. இதனால், அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து ராஜலட்சுமி வீட்டிற்குள் நுழைந்து பார்த்தனர்.

அப்போது, ராஜலட்சுமி இறந்து கிடந்ததைப் பாரத்து ராஜலட்சுமியின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் அக்கம், பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 10 வயதான கிஷோர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளான் என்பது தெரியவந்தது.

தாய் உயிரிழந்தது கூட தெரியாமல், தாயுடன் 10 வயது சிறுவன் வசித்து வந்தது அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.