தாய், மகளை மரத்தில் கட்டிவைத்து பாலியல் வன்கொடுமை –அதிர்ச்சி வீடியோ
சமூக வலைத்தளங்களில் கடந்த 27-ம் தேதி முதல் ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தலித் தம்பதியர் மற்றும் அவர்களின் மைனர் சிறுமியை சிலர் மரத்தில் கட்டிவைத்து அடிக்கின்றனர்.
அதன்பின்னர் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் தாயையும் அவரது மகளையும் சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர். இதை வீடியோவாகவும் எடுத்து மகிழ்ந்து இருக்கின்றனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் பசில்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தான் நடந்திருக்கிறது என்றும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் விஜய் சம்ப்லா, பஞ்சாப் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.