14 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய் - மகனால் விபரீத முடிவு!
தாய், தன் மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மன உளைச்சல்?
செங்கல்பட்டு, கரசங்கால் கிராமம் அருகே அமைந்துள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்மணியும், அவரது 10 வயது பெண் குழந்தையும் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர்.

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தாய் மற்றும் மகள் இருவரும், சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பாண்டிச்சேரி விரைவு ரயில் வருவதை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதிவேகமாக வந்த ரயில், அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த மோதலில், தாய் மற்றும் மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு, உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சமீபத்தில், பலியான பெண்ணின் மகனும்,
தாய் விபரீத செயல்
ரயில் மோதி பலியான 10 வயதுச் சிறுமியின் சகோதரனுமான புருஷோத்தமன் என்ற சிறுவன், கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மகனை இழந்த அதிர்ச்சியிலும், துயரத்திலும் ஆழ்ந்திருந்த அந்தத் தாய், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.

மகனின் இழப்பு தந்த மனச்சோர்வினால், தாய் மற்றும் மகள் இருவரும் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலை கவனிக்கத் தவறியிருக்கலாம் அல்லது மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.