வேலூர் வெடி விபத்தில் மகன்கள் பலி, சோகம் தாங்காமல் தாய் தற்கொலை
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பேருந்து நிலையத்தில் பட்டாசு கடை வெடித்த விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது பேரப்பிள்ளைகள் தனுஜ் மற்றும் தேஜஸ் எரிந்து சாம்பலான துயர நிகழ்வு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த துயரச்சம்பவத்தின் சுவடு அடங்குவதற்குள் எரிந்து சாம்பலான தனுஷ் மற்றும் தேஜஸ் ஆகியோரின் தாயாரும் இறந்த மோகனின் மகளுமான 33 வயதான வித்தியா கடும் துயரத்தில் இருந்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக பிள்ளைகளை பிரிந்த சோகத்தில் உறவினர்கள் எவ்வளவோ ஆறுதல் கூறியும் பெருத்த சோகத்துடன் விரக்தியான மனநிலையுடன் காணப்பட்ட வித்யா இன்று காலை லத்தேரி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தலை மற்றும் உடல் சிதறி இறந்த அவரது உடலை மீட்ட ஜோலார்பேட்டை தென்னக ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தாத்தா மற்றும் பேரன்கள் இறந்த சோகம் ஆறுவதற்குள் நடந்த இந்த சோகம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
SLS சான்றிதழ் இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் IBC Tamil
மகிந்த - மைத்திரி காலத்தில் ஏற்பட்ட கோடிக்கணக்கான இழப்பு : தணிக்கை அறிக்கையில் வெளியான தகவல் IBC Tamil