என் தாயை பற்றி... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் மல்க பேச்சு

mother edappadi Thiruvaiyaru tearful
By Jon Mar 29, 2021 03:08 PM GMT
Report

சென்னை திருவெற்றியூரில் பிரச்சாரத்தின்போது கண்ணீர் மல்க பேசியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சென்னை திருவெற்றியூரில் அதிமுக தொகுதி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது தாயைப் பற்றி இழிவாக பேசியது குறித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "எவ்வளவு கீழ்தரமாக பேசியுள்ளார், ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக இருந்தால் எப்படி கீழ்தரமாக பேசுவார்கள் என்பதை எண்ணி பாருங்கள்.

முதலமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால், தாய்மார்கள் நிலைமை என்னவாகும் என்று எண்ணி பாருங்கள். எனக்காக பரிந்து பேசவில்லை, ஒவ்வொருவரும் தாய்க்கு பிறந்தவர்கள், தாய்மார்ளை கொச்சைப்படுத்தி பேசுவது, இழிபடுத்தி பேசுபவர்களுக்கு தக்க தண்டனைய வழங்க வேண்டும்.

என்னுடைய தாய் கிராமத்தில் பிறந்தவர், விவசாயி, இரவு பகல் பாராமல் பாடுபடுபவர், அவர் இறந்துவிட்டார் அவரை பற்றி இழிவாக தரக்குறைவாக எப்படி எல்லாம் பேசினார், முதலமைச்சருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலையை சற்று யோசித்து பாருங்கள். நான் நினைத்தால் சாதிக்க முடியும், நான் சாதாரண குடும்பத்தில் பிறந்த வளர்ந்தவன், ஏழையாக இருந்தாலும் பணக்கார்ராக இருந்தாலும் தாய்தான் உயர்ந்த ஸ்தானம்.

யார் பெண் குலத்தை இழிவாக பேசினாலும், தாயை இழிவாக பேசினாலும் ஆண்டவன் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை தருவார். இப்படிபட்டவர்கள் ஆட்சியில் வந்துவிட்டல் எப்படி அராஜகம் செய்வார்கள் என்று பெண்கள் எண்ணி பார்க்க வேண்டும், இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.