பெற்ற தாய்க்கு ரூ.20 லட்சம் செலவில் கோவில் கட்டிய பாச மகள் - கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்

mother temple Built Flexibilityincident Affectionatedaughter தாய்க்கு கோவில் பாச மகள்
By Nandhini Feb 16, 2022 11:55 AM GMT
Report

செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்த, நந்திவரம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது தாயார் கன்னியம்மாள். இவர் கணவர் ஆறுமுகம். கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.

கணவரை விட்டு பிரிந்த கன்னியம்மாள் தன்னந்தனியாக கஷ்டப்பட்டு தன்னுடைய ஒரே மகள் லட்சுமியை வளர்த்து வந்துள்ளார். தன்னுடைய மகளை படிக்க வைப்பதற்கக, தாய் கன்னியம்மா இரவு, பகல் பாராமல் பல வீடுகளில் வீட்டு வேலை பார்த்துள்ளார்.

தாயின் கஷ்டத்தை நன்றாக உணர்ந்த லட்சுமி நன்றாக படித்துள்ளார். தற்போது, லட்சுமி தலைமை செயலகத்தில் டைப்பிஸ்டாக வேலை பார்த்து வருகிறார்.

தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தாய்க்காக லட்சுமி திருமணம் செய்து கொள்ளாமல் தாயுடனே வாழ்ந்து வந்துள்ளார்.

தாய் கன்னியம்மா இறந்து போனதும், மனமுடைந்த லட்சுமி, தன் தாய் நினைவாக திருஉருவ சிலையை உருவாக்கி அவருக்கு ஒரு கோவிலை கட்டியுள்ளார்.

அந்த கோவிலில் வினாயகர், பாலமுருகன், வைஷ்ணவி, அபிராமி உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகளையும் வைத்து, சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தாய்க்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.

இந்த கோவிலை அனைத்து மக்களும் வந்து பார்த்து, வழிபட்டு செல்கின்றனர். பெற்ற தாய்க்காக மகள் கோவில் கட்டிய சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது. 

பெற்ற தாய்க்கு ரூ.20 லட்சம் செலவில் கோவில் கட்டிய பாச மகள் - கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம் | Mother Built The Temple Flexibility Incident