கள்ளக்காதலால் பிறந்த குழந்தையை கழிவறையில் வீசி சென்ற தாய் அதிரடி கைது !
தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம்,அத்திப்பேட்டில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவறையில் பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்தது.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே போலீசார் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சாய்ரா பானு குழந்தையை வீசி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது சாய்ரா பானு தனக்கு திருமணம் ஆன நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சாய்ரா பானுவிற்கு அண்மையில் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இதையடுத்து அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணி ஆன அவர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது தனக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி அந்த பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு பிரசவம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து குழந்தையை பெற்றெடுத்து போட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல வீட்டிற்கு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.