2 நண்பர்களை உல்லாசத்திற்கு அழைத்த இளைஞர் - தாய்க்கு நேர்ந்த கொடூரம்
இரு நண்பர்கள் இணைந்து மூதாட்டியை கொலை செய்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 70 வயதான கீதா பூஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 45 வயதான ஜிதேந்திரா என்ற மகன் உள்ளார்.
புத்தாண்டுக்கு மறுநாள் முதல் இவர்கள் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
ஓரின சேர்க்கை
தகவலின் அடிப்படையில் வந்து பார்த்த காவல்துறையினர் வீடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கேபிள் வயர் உதவியுடன் தாய் மற்றும் மகன் கழுத்து நெரிக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர்.
இருவரின் சடலங்களை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், புத்தாண்டு அன்று ஜிதேந்திரா, தனது நண்பர்களான 19 வயதான சுபம் நாராயணன் மற்றும் மங்கேஷ் ஆகியோரை தனது வீட்டிற்கு அழைத்து, மூவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஜிதேந்திரா, தனது நண்பர்கள் இருவரையும் ஓரின சேர்க்கையில் ஈடுபட அழைத்துள்ளார்.
கைது
இதனால் ஆத்திரமடைந்த இருவரும், ஜிதேந்திராவை கேபிள் ஒயரால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதனை பார்த்து கூச்சலிட்ட அவரின் தாயாரையும் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, வீட்டில் இருந்த பணம், நகை, மொபைல் போன்களை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்துள்ளதோடு, வழக்கு தொடர்பகா விசாரணை நடத்தி வருகின்றனர்.