சீனாவில் இருந்து தமிழகம் வந்த தாய், மகளுக்கு கொரோனா - நடுங்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள்
சீனாவில் இருந்து மதுரை வந்த விருதுநகரைச் சேர்ந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தல்
சீனாவில் கொரோனா தொற்று பரவல் என்பது அதிகரித்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் உதவியாளர்களுக்கு கொரோனா வார்டில் அனுமதி இல்லை என்றும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மாணவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், மருத்துவக் கல்லூரிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று
மேலும் வெளிநாடுகளில் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்த நிலையில், அவர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.