கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தாய்: குழந்தையுடன் மாயம்
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கபட்ட பெண் பிறந்த குழந்தையுடன் தப்பியோட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சபீர்.
இவருடைய மனைவி ஜீனத் கடந்த வாரம் பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மூன்று தினங்களுக்கு முன் ஜீனத்திற்கு குழந்தை பிறந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே ஜீனத்திற்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் இன்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவரை பிரசவ பிரிவிலிருந்து கொரோனா பிரிவிற்கு மாற்ற அழைத்து சென்ற போதுமருத்துவமனையிலிருந்து ஜீனத் கைக்குழந்தையுடன் தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.