T20 உலக கோப்பை - சிறந்த மதிப்புமிக்க அணி பட்டியல் வெளியீடு - வியந்து போன ரசிகர்கள்

Cricket T20 World Cup 2022 International Cricket Council
By Nandhini Nov 14, 2022 01:22 PM GMT
Report

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறந்த மதிப்புமிக்க அணி பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்த 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நேற்றோடு நிறைவடைந்தது. இப்போட்டியில் 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின.

2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து

நேற்று மெல்போர்னில் T20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

இப்போட்டியின் இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சிறந்த மதிப்புமிக்க அணி பட்டியல் வெளியீடு

இந்நிலையில், T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் மதிப்பு பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

most-valuable-team-tournament-revealed

சிறந்த மதிப்புமிக்க அணி பட்டியல்

1. ஜோஸ் பட்லர் ( கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) - 212 ரன்கள் மற்றும் 9 அவுட்டுகள்

2. அலெக்ஸ் ஹேலஸ் - 225 ரன்கள்

3. விராட் கோலி - 296 ரன்கள்

4. சூர்யகுமார் யாதவ் - 239 ரன்கள்

5. கிளென் பிலிப்ஸ் - 201 ரன்கள்

6. சிக்கந்தர் ராசா - 219 ரன்கள் மற்றும் 10 விக்கெட்டுகள்

7. ஷதாப் கான் - 98 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள்

8. சாம் கரன் - 13 விக்கெட்டுகள்

9. ஆன்ரிச் நோர்ட்சே -11 விக்கெட்டுகள்

10. மார்க் வுட் - 9 விக்கெட்டுகள்

11. ஷாகின் அப்ரிடி - 11 விக்கெட்டுகள்

12. ஹர்த்திக் பாண்ட்யா -128 ரன்கள் 8 விக்கெட்டுகள்