உலகின் மிகவும் மாசுபட்ட ஊர் - இந்த நகரத்திற்கு தான் முதலிடம்!

Nepal
By Sumathi Apr 18, 2023 06:08 AM GMT
Report

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாசுபட்ட நகரம்

உலக நாடுகளின் காற்று மாசுபாட்டை கணக்கிடும் ஐக்யூ ஏர்-இன் அறிக்கைப்படி, நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு(Kathmandu) முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு காற்றின் தரக் குறியீடு 190 ஐத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மிகவும் மாசுபட்ட ஊர் - இந்த நகரத்திற்கு தான் முதலிடம்! | Most Polluted Cities In The World Nepal

அந்த நகரை புகைமூட்டம் சூழ்ந்துள்ள நிலையில், உள்ளூர் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக, காத்மாண்டு மற்றும் நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிகரித்து வரும் மாசுபாட்டிற்கு காரணம் காட்டுத் தீ மற்றும் விவசாய எச்சங்களை எரிப்பதே என அரசு குற்றம்சாட்டியுள்ளது.

காத்மாண்டு

இதனால் அந்நகரில் வாழும் மக்களுக்கு புற்றுநோய், பக்கவாதம், ஆஸ்துமா மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தொடர்ந்து, அந்நகரில் வசிக்கும் மக்களுக்கு சராசரி வாழ்நாள் குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகின் மிகவும் மாசுபட்ட ஊர் - இந்த நகரத்திற்கு தான் முதலிடம்! | Most Polluted Cities In The World Nepal

அங்கு, மக்கள் அளவிற்கு மீறி குடிபெயர்வதால் மக்கள் தொகை அதிகரிப்பதோடு , வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் காற்று மாசுபாட்டை உண்டாக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.