ஒரு வினாடிக்கு 2 பிரியாணி ..ஸ்விக்கி வெளியிட்ட ஆச்சர்ய ரிப்போர்ட்
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி இந்த ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
பிரியாணி
இந்தியா முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஸ்விகி உள்ளிட்ட ஆன்லைன் ஆப் மூலமாக உணவு ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் எந்தெந்த உணவுகள் அதிகமாக ஆர்டர் செய்யப்படுகின்றன என்பது குறித்து ஸ்விக்கி பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதலிடத்தில் பிரியாணி
அந்த வகையில் இந்த முறையும் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தை பெற்றுள்ளது. ஸ்விகியில் வினாடிக்கு 2 பேர் பிரியாணியை ஆர்டர் செய்வதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அளவு பிரியாணி விற்பனையானது புதிய சாதனை என கூறப்படுகிறது. இதுதவிர அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் இரண்டாவது இடத்தில் மசாலா தோசை, மூன்றாவது இடத்தில் சிக்கன் ப்ரைடு ரைஸ் ஆகிய உணவுகள் உள்ளன.
இதுதவிர ஒரு ஆண்டில் சமோசா மட்டுமே 40 லட்சம் பேர் ஆர்டரசெய்துள்ளதாககூறப்பட்டுள்ளது.