அதிக கோல்கள் அடித்து 2023ம் ஆண்டில் முதலிடம் பிடித்த வீரர் - யார் தெரியுமா..?

Cristiano Ronaldo Football Portugal World Sports
By Jiyath Jan 01, 2024 10:00 AM GMT
Report

கடந்த 2023ம் ஆண்டு அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.

அதிக கோல்கள்

உலகம் போற்றும் சிறந்த கால்பந்து வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் அணியின் கேப்டனான இவர், சவுதி அரேபியாவை சேர்ந்த அல் நேசர் கிளப்புக்காக விளையாடி வருகிறார்.

அதிக கோல்கள் அடித்து 2023ம் ஆண்டில் முதலிடம் பிடித்த வீரர் - யார் தெரியுமா..? | Most Goals In 2023 Cristiano Ronaldo Tops

இதுவரை மொத்தம் 54 கோல்களை தேசிய அணி மற்றும் கிளப்புக்காக இவர் அடித்துள்ளார். இதன் மூலம் கடந்த 2023ம் ஆண்டு அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தை பிடித்துள்ளார்.

மகிழ்ச்சி

இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில், இங்கிலாந்தின் ஹாரி கேன், பிரான்சின் கிலியன் எம்பாப்வே ஆகியோர் தலா 52 கோலுடன் உள்ளனர்.

அதிக கோல்கள் அடித்து 2023ம் ஆண்டில் முதலிடம் பிடித்த வீரர் - யார் தெரியுமா..? | Most Goals In 2023 Cristiano Ronaldo Tops

இந்த சாதனை குறித்து ரொனால்டோ கூறுகையில் "தனிப்பட்ட முறையிலும், ஒரு அணியாகவும் 2023ம் ஆண்டு எனக்கு சிறப்பாக அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அல் நேசர் கிளப்புக்காகவும், போர்ச்சுகல் அணிக்காகவும் நிறைய கோல்கள் அடித்து வெற்றிக்கு உதவியிருக்கிறேன். 2024ம் ஆண்டிலும் இதே போல் நிறைய கோல்கள் அடிக்க முயற்சிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.