உலக அளவில் அதிக கட்டணம் வாங்கும் School இதுதான் - எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க!
உலகிலேயே அதிக கட்டணம் வாங்கும் பள்ளி குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதிக கட்டணம்
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பயணம் செய்த அனைவருக்கும் கல்வி என்பது முக்கிய ஆயுதமாக உள்ளது.அப்படி குழந்தைகளுக்கு நல்ல கல்வி கற்றுத்தர அரசுப் பள்ளி முதல் லட்சங்களில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறனர்.
ஆனால் கோடிகளில் வசூலிக்கும் சில பள்ளிகளும் உலகில் உள்ளன.அதன்படி, உலகிலேயே அதிக கட்டணம் வாங்கும் பள்ளி எது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.ஸ்பியர்ஸ் ஸ்கூல்ஸ் இன்டெக்ஸ் 2024 இல் உலகின் மிகவும் விலையுயர்ந்த பள்ளியாக Institut auf dem Rosenberg உள்ளது.
பள்ளி
இந்த நிறுவனம் ரோசன்பெர்க் நிறுவனத்தால் 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மேலும் சுவிட்சர்லாந்தின் மிகவும் பழமையான தனியார் சர்வதேச போர்டிங் பள்ளிகளில் ஒன்றாகும். 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது 60 நாடுகளைச் சேர்ந்த சுமார் 280 மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.
இங்கு அதிநவீன வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பல உலகத்தூதர்கள், உலகத் தலைவர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களுக்குக் கல்வி கற்பித்துள்ளது. இதன் கட்டணம் ஆண்டுக்கு $176,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,52,50,440.83 ஆகும்.